கேரள மாணவி பிரதமர் மோடிக்கு அனுப்பிய பரிசு: என்ன தெரியுமா?
டெல்லி சென்ற பாஜக எம்.பி சுரேஷ் கோபி கேரள மாணவி அளித்த பரிசை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள குளநாடா கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி. இந்த மாணவி நாடு முழுவதும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த மாணவி அவரது கிராமத்தில் வளர்த்த கொய்யா செடியை, பிரதமர் மோடிக்கு பரிசாக டெல்லி சென்ற பாஜக எம்பி சுரேஷ் என்பவரிடம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக எம்பி சுரேஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, பத்தினம்திட்டாவில் உள்ள அறிவில் சிறந்த மாணவியின் மரக்கன்று இந்தியாவின் பிரதமர் வீட்டில் நடப்படவுள்ளது, என்று பிரதமர் மோடியிடம் மரக்கன்றை வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
மேலும், இது பற்றி பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் நடப்போவதை உறுதி செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த கேரள மாணவி ஜெயலட்சுமி, மாநில அரசின் ‘கர்ஷக திலகம்’ என்ற சிறந்த மாணவிக்கு அளிக்கப்படும் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(1/4) Nurtured by a thoughtful young girl in a courtyard of Pathanapuram, all set to bloom in the residence of the Indian Prime Minister. Handed over the guava sapling presented by Jayalakshmi (on my visit to Gandhi Bhavan) to the @PMOIndia @narendramodi ji yesterday as promised. pic.twitter.com/2C2oHAJa02
— Suresh Gopi (@TheSureshGopi) September 2, 2021