பிரம்மாண்ட ரோந்து கப்பல்- கடனில் தத்தளித்த ரிலையன்ஸ்? ஒப்பந்தம் திடீர் ரத்து???
கடற்படைக்கு தேவையான ரோந்து கப்பல்களை தயாரிக்க போடப்பட்ட ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து கப்பல்படை உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது வெளியான தகவல்:
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் இந்திய கப்பல் படைக்கு ரோந்து கப்பலை செய்து தர கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் ஒப்பந்தப்படி குறித்த காலத்திற்குள் கப்பல்களை வழங்குவது தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்திய கப்பற்படை தெரிவித்த நிலையில் ஆர்என்இஎல் நிறுவனம் ரூ.11 ஆயிரம் கோடி அளவிற்கு கடனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.