நண்பனின் 2 வயது மகளை கற்பழித்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை வழங்கிய காசியாபாத் நீதிமன்றம்!

Default Image

உத்திர பிரதேச மாநிலத்தில் நண்பனின் 2 வயது மகளை கற்பழித்து கொன்ற கொடூரனுக்கு காசியாபாத் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத்தில் தனதுநெருங்கிய நண்பரின் இரண்டு வயது மகளை சாலையோர புதிர்களுக்கு பின்னால் கற்பழித்து தூக்கி வீசி எறிந்த சாந்தனு என்பவனின் கொடூரமான செயலுக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி கே.வி.கே நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். பத்து சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது இதுகுறித்து காசியாபாத் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்டவர் திருந்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எனவும், இந்த வழக்கு அரிதிலும் அரிதான ஒன்று எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளதுடன்,  பாலியல் எண்ணம் கூட புரியாத ஒரு இரண்டரை வயது சிறுமிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதுடன், சிறுமியை பலாத்காரம் செய்த சாந்தனு எனும் கொடூரனுக்கு காசியாபாத் நீதிமன்றத்தின் கீழ் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளி உடனே கைது செய்யப்பட்டு டிசம்பர் 21ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்திருந்தார். வழக்கு தொடரப்பட்ட ஒரே மாதத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்