மோசமடையும் உடல்நிலை ! லாலு பிரசாத் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல்
லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் கோரி ஜார்கண்ட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார்.இதனைத்தொடர்ந்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் லாலு பிரசாத்.இது தொடர்பான வழக்கினை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவரது மனுவில், தமக்கு உடல் நிலை மோசமடைந்து வரும் நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.லாலு பிரசாத் சார்பாக வழக்கறிஞர் பிரபாத்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.