தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள்-ப.சிதம்பரம் ட்வீட்

Default Image

தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், அனைத்து மக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்: கைகளையும், வீட்டையும், சுற்றுப்புறங்களையும் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். வெளி வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

தேவையில்லாத சந்திப்புகளைத் தவிர்த்து விடுங்கள். தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள். இந்தச் சோதனையையும் இந்தியா வெல்லும் என்று ட்வீட் செய்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்