கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இப்போதே தயாராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. மறுபுறம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பல மருத்துவமனைகளில் ஏற்படும் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து கொண்டியிருக்கின்றன. இதற்கு மத்திய அரசின் நிர்வாகம் சரியில்லை என்று பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். கொரோனா உருமாறி வருவதால் இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலையை தடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறியிருந்தது.
எப்போது உருவாகும் என தெரியாததால் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இப்போதே தயாராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா 3வது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க தயாராகுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த இப்போதே அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, ஜூன் மாத தொடக்கத்திலிருந்து இந்த இரண்டாம் அலையின் வேகம் படிப்படியாகக் குறையும் என்று வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் கூறியுள்ளார். கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் நோயைத் தடுப்பதில் நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன என்றும் வைரஸ் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த லாக்டவுன் நிச்சயம் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…