ஊரடங்கை மீறி காரில் சுற்றால் ! போலீசார் கூறியதை ஏற்க மறுத்து கையை வெட்டிய கும்பல்

பஞ்சாப்பில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதை தட்டிக் கேட்ட போலீசின் கையை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் பஞ்சாப்பில் காரில் சென்ற மர்ம நபர்கள் போலீசார் ஒருவரின் கையை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ளே பாட்டியாலா அருகே ஊரடங்கு உத்தரவை மீறி காரில் ஒரு குமபல் சென்றுள்ளது.காரில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.பின் அவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூட்டமாக செல்லக்கூடாது என்றும் கூறினார்கள்.போலீசார் கூறியதை அந்த கும்பல் ஏற்க மறுத்தனர்.பின்னர் அந்த கும்பல் போலீசார் ஒருவரின் கையை கத்தியால் வெட்டினார்கள்.இதில் போலீசாரின் கை துண்டாகியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றது.இறுதியாக போலீசார் 9 பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025