India – Canada : இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்… கனடா அதிகாரிக்கு இந்திய தூதரகம் அதிரடி உத்தரவு.!

Canada PM Justin tr - PM Modi

கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, இந்த கொலையின் பின்னணியில் இந்தியாவுக்கு ஆதரவான ஓர் அமைப்பு இருப்பதாக  கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், இது தொடர்பாக கனடா நாட்டில் உள்ள இந்தியா தூதரக அதிகாரியை கனடா நாட்டு அரசாங்கம் அழைத்து அண்மையில்  மூத்த அதிகாரியை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த விவகாரம் இந்தியா   – கனடா நாட்டு உறவுகளுக்கு இடையே பெரும் பரபரப்பை உண்டாக்கின.

இந்நிலையில், இன்று இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்து பேசியுல்ளது. அப்போது கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற கூறிய கனடா நாட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்னும் 5 நாட்களுக்குள் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு அதிகாரிகள் வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே மறைமுக மோதல் போக்கு இருந்து கொண்டே இருக்கிறது. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களை தாக்குவதும், இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதும் தொடர்கதையாக வருகிறது என்றும்,

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடா நாட்டு அரசுக்கு ஆதரவாக இருப்பதால், அவர்களுக்கு கனடா நாட்டு அரசு புகலிடம் கொடுப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் தொடர் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜி20 மாநாடு வரை எதிரொலித்தது.

ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் மோடியுனான சந்திப்பின் போது கூட பிரதமர் மோடி கனடா பிரதமரிடம் , தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும். அதனை இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரத்தில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ – பிரதமர் மோடி இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஜி20 மாநாடு முடிந்து கனடா செல்ல இருந்த அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் பழுதாகியது. இதனை அடுத்து, மாற்று விமானம் வரும் வரையில் டெல்லியில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு கனடா நாட்டு விமானத்தில் ஊருக்கு புறப்பட்டார் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்