டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ம் முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் 126 பேர் செல்ல உள்ளனர். இவர்கள் 18 விளையாட்டுகள் உள்ளடக்கிய 69 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடி வருகிறார். இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்று தர வீரர்களுக்கு ஊக்கமளித்தும், முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்க பிரதமர் அறிவுரை வழங்கி வருகிறார்.
இந்த கலந்துரையாடலில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன், சரத் கமல் கியோர் பங்கேற்றுள்ளனர். இந்த காணொலி நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், இணை அமைச்சர் நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…