5 மாத குழந்தைக்கோ மரபணு நோய் ; ஊசிக்கு 6 கோடிக்கு வரிவிலக்கு அளித்த மத்திய அரசு

Default Image

மும்பையைச் சேர்ந்த டீரா காமத் என்ற 5 மாத குழந்தை ஒரு அரிய மரபணு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தது .இந்த குழந்தை தாய்ப்பால் அருந்தும் போது மருந்து உட்கொள்ளும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல் செயலற்று போகும் நிலைக்கு தள்ளப்படும்.

மரபணு நோய் :

அவரது பெற்றோர் மருத்துவரிடம் காட்டியபோது மருத்துவர்களோ டீராவிற்கு ஏற்பட்டிருப்பது ஒரு அரிய மரபணு நோய் என்றும் ஆறாயிரம் பேரில் ஒருவருக்கு அரிதாகத்தான் இந்த நோய் பாதிப்பு ஏற்படும். அது இந்தக் குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.

நரம்புகள் மற்றும் தசைகளை உயிர்ப்புடன்  வைத்திருக்க உதவும் புரதச்சத்தை தயாரிக்கும் மரபணுக்கள் டீராவின் உடலில் இல்லை என்றும் இதனால் தான் அவளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு உடலில் இல்லாத மரபணுக்களை ஊசியின் மூலம் தான் ஏற்ற முடியும் என்றும் அந்த வசதி இந்தியாவில் இல்லை என்று டாக்டர்கள் கூறினர்.

6 கோடி வரி விலக்கு :

டிராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் வெளிநாட்டிற்கு கொன்டு செல்ல முடியாது என்றும் ஆனால் அந்த மருந்தை இந்தியா கொண்டு வர 16 கோடி செலவாகவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இவ்வளவு பெரிய தொகையை எப்படி திரட்டுவது என்று திணறிய பெற்றோருக்கு பலர் உதவிக்கரம் நீட்டினர் .

இந்நிலையில் அந்த மருந்திற்கான வரி சுமார் 6 கோடியை  மத்திய அரசு விலக்களித்துள்ளது.மருந்தின் வரியை தள்ளுபடி செய்ததற்காக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஃபட்னாவிஸ் ட்வீட் :

இதற்கு முன்னதாக திரு.ஃபட்னாவிஸ், பிரதமர் மோடியிடம் தீராவின் பெற்றோரால் இந்த வரியை செலுத்த முடியாது என்றும் இது கோடியில் இருப்பதால் மருந்து இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஃபட்னாவிஸ் மருந்தை இறக்குமதி செய்வதற்கான அனைத்து வரிகளையும் (தோராயமாக .5 6.5 கோடி) விலக்கு அளிப்பதற்கான உங்கள் மனிதாபிமான மற்றும் மிகவும் உணர்திறன் அணுகுமுறைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றிகள்! விரைவான மீட்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை “என்று திரு ஃபட்னாவிஸ் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் சிறுமியின் பெற்றோர் ஏற்கனவே மருந்து வாங்க தேவையான தேவையான  ரூ  16 கோடியை திரட்டிவிட்டனர் என்று திரு ஃபட்னாவிஸ் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்