மேற்கு வங்கத்தில் மே 4 முதல் சில இடங்களில் பொதுமுடக்கம் தளர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்கத்தில் மே  4 முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் தற்போது பரவியுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா வைரசை பேரிடராக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று அதிகமானதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே சென்றதால், ஊரடங்கு தளர்வு செய்யப்படுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவியது. பின்னர் முடிவடைய இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு வரும் மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து மக்களை வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாட உணவிற்கு தவிக்கும் சூழல் நிலவியுள்ளது. கொரோனா பாதிப்பு ஒருபக்கம் உயர்ந்துகொண்டே செல்ல நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனை சரிக்கட்ட மற்றும் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்குமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டது. அதன்படி, தங்களால் முடிந்த நிதியை பல்வேறு துறையை சார்ந்தவர்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள ஊரடங்கில் தளர்வு இருக்குமா அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா என்று மக்கள் மனதில் மறுபடியும் குழப்பம் நிலவி வருகிறது.

அதனபடி, சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் மே 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்க்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அனைத்தும் சரியாக அமைந்தால் திங்கட்கிழமை முதல் பொதுமுடக்கத்தில் தளர்வு அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மேற்கு வங்கத்தில் கொரோனாவால் 725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். 119 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

22 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

43 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

46 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago