10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஊரடங்கு முடிந்த பின் நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை, 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவால், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் ஊரடங்கு உத்தரவால் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு , ஏனைய பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும், போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்றும், தேர்வுகள் துவங்குவதற்கு 10 நாட்கள் முன்பாகவே தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…