ஜெமினி சர்க்கஸ் நிறுவனர் ஜெமினி சங்கரன் உடல்நலக் குறைவால் காலமானார்..!

Default Image

ஜெமினி சர்க்கஸ் நிறுவனர் ஜெமினி சங்கரன் தனது 99 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்திய சர்க்கஸ் நிறுவனத்திற்கு முன்னோடியும் ஜெமினி சர்க்கஸ் நிறுவனருமான ஜெமினி சங்கரன், உடல்நலக்குறைவால் தனது 99-வது வயதில் நேற்று இரவு காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு (ஏப்ரல் 23ம் தேதி) இரவு ஜெமினி சங்கரன் உயிரிழந்துள்ளார். ஜெமினி சங்கரன் அவர்களுக்கு, அஜய் ஷங்கர், அசோக் சங்கர் என்ற இரண்டு மகன்கள் மற்றும் ரேணு சங்கர் என்ற ஒரு மகள் உள்ளனர். அவரது மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்திய சர்க்கஸ் கலைக்கு சங்கரன் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், வெளிநாட்டு கலைஞர்கள் மற்றும் தந்திரங்களை உள்ளடக்கிய ஜெமினி சங்கரன் இந்திய சர்க்கஸை நவீனப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்ததாகவும் முதல்வர் பினராயி விஜயன் பாராட்டினார். அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பாகும் என்றும் அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்