முதன் முறையாக பெண் அதிகாரி.! பாகிஸ்தானுக்கான புதிய இந்திய தூதர் நியமனம்.!
பாகிஸ்தானுக்கான இந்தியா தூதராக தற்போது சுரேஷ் குமார் செயல்பட்டு வருகிறார். இவர் விரைவில் இந்தியா திரும்புவார் என்றும், புதிய தூதராக கீதிகா ஸ்ரீவஸ்தவா எனும் பெண் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ்குமார் விரைவில் தாயகம் திரும்பிய உடன் கீதிகா ஸ்ரீவஸ்தவா பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்று பொறுப்பேற்று கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதன் முறையாக ஒரு பெண் அதிகாரி பாகிஸ்தான் சென்று இந்தியா தூதராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீதிகா ஸ்ரீவஸ்தவா, 2005 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி. இவர் தற்போது மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணை செயலாளராக உள்ளார். 2007 – 2009 காலகட்டத்தில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.