வரும் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 11 %  இருக்கும் – ஆய்வறிக்கையில் தகவல்

Default Image

நடப்பாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 7.7 % இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 – 21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். பின்னர் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,வரும் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 11 %  இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் ஒட்டுமொத்த ஏற்றுமதி மற்றும் அரசு பயன்பாடு ஆகியவை வீழ்ச்சி சதவீதத்தை பெருமளவு தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 7.7 % இருக்கும் என்றும் அந்த அறிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 15.4 % என்ற அளவில் இருக்கக்கூடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.கொரோனா பாதிப்புக்கு பிறகான இந்திய பொருளாதாரத்தின் ‘ V’ வடிவ மீட்சி குறித்த விரிவான ஆய்வை பொருளாதார ஆய்வறிக்கை வழங்கியுள்ளது. மாபெரும் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை ‘ V’ வடிவ மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அது கூறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்