சரியான நிதி மற்றும் மக்கள் சார்ந்த நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுகலான ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவாக, நாட்டின் ஜி.டி.பி. 23.9 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சரியான நிதி மற்றும் மக்கள் சார்ந்த நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என கூறினார். மேலும், எதையும் செய்யாத மத்திய அரசுக்கு இது அவமானப்பட வேண்டிய செயலாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால், அதற்கு மோடி அரசு வெட்கப்படமாட்டாது எனவும், தவறுகளையும் ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேசமும் தற்பொழுது பொருளாதார வீழ்ச்சியால் பெரிய விலையை கொடுத்து வருகிறது என கூறிய அவர், மத்திய அரசு போலியான கதைகளை கூறி வருவதாகவும், அந்த கதைகள் அனைத்தும் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கை மூலம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…