தொடர் ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9% சரிவு
2020-2021-ம் ஆண்டின் முதல் காலாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன்) ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், 2019-2020-ம் ஆண்டின் முதல் காலாண்டின் பதிவான 5.2 வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது , 2020-2021-ம் ஆண்டின் முதல் காலாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன்) உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மைனஸ் 23.9 % விழுக்காடு சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்,வேளாண்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 21 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான சரிவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்னர். இந்த சரிவுக்கு தொடர் ஊரடங்கு, கொரோனா பிரச்சனையை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே பிரச்சனை காரணமாக பல நாடுகள் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரை இரண்டாவது காலாண்டிலும் ஜிடிபி குறையும்பட்சத்தில், நாட்டின் பொருளாதாரம் மந்த நிலை இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.