ஜிபி வாட்சாப் செயலி மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் செயலி. இந்த வாட்டசாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பை விட சில கூடுதல் நன்மைகளையும் பயனர்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதே போல, கடந்த நான்கு மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர் (உளவுபார்க்கும் கோப்புகள்) கண்டறிதலின் பெரும்பகுதிக்கு இந்த ஜிபி வாட்சாப் காரணமாக இருக்கிறது என அறிக்கை வெளியாகியுள்ளது.
மால்வேர் பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி நிறுவனமான ESET அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை அண்மையில் வெளியிட்டது.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முதலில், உலக அளவில் அதிகம் ஆண்டிராய்டு போன் மூலம் தகவல் திருடப்படுவது, தேவையற்ற தகவல்களை உள்ளீடு செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதில் இந்தியா முன்னணியில் முக்கிய இடத்தில் இருக்கிறதாம்.
ஆண்டிராய்டு போன் அச்சுறுத்தல்கள் இந்த ஆய்வில் கடந்த முறையை விட 9.5 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இந்த மால்வேர் கோப்புகள் (தேவையற்ற தீங்கு விளைவிக்கும் கோப்புகள்) நம்மால் கண்டறியப்படாமல் இருந்தால் அது மற்றொரு செயலியாக மாறுவேடமிட்டு, பின்னர் நமது சாதனங்களை உளவு பார்க்க தொடங்கும்.
மேலும், இந்த மால்வேர் கோப்புகள் ஆடியோ மற்றும் வீடியோவை ரகசியமாக பதிவு செய்யும் திறன் கொண்டவையாக இருக்கிறது. இந்த சம்பவங்களை செய்யும் ஆப்களில் நமக்கு மிகவும் பரிட்சயமான ஜிபி வாட்சாப் (GB WhatsApp) முக்கிய பொறுப்பு வகிக்கிறது எனும் ஷாக்கிங் தகவலை ESET வெளியிட்டுள்ளது.
இந்த வாட்சாப் செயலி மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் செயலி ஆகும். இந்த வாட்டசாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பின் அனைத்து நிலையான அம்சங்களையும் கொடுக்கிறது. அதனை விட சில கூடுதல் நன்மைகளையும் பயனர்களுக்கு வழங்குகிறது.
ஆனால், அதே போல, கடந்த நான்கு மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர் (உளவுபார்க்கும் கோப்புகள்) கண்டறிதலின் பெரும்பகுதிக்கு இந்த ஜிபி வாட்சாப் காரணமாக இருக்கிறது என அறிக்கை கூறுகிறது.
இந்த மாதிரியான ஒரு முதல் தர ஆப்பின் மூன்றாம் தர ஆப்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் கிடைக்காது. பெரும்பாலான பயனர்களால் ஓரங்கட்டப்பட்டு விட்டது. ஏனென்றால் இது பல பாதுகாப்பு அபாயங்களை கொண்டுள்ளது. பெரும்பாலான APK கோப்புகளைப் போலவே நிறைய கோப்புகளை (ஃபைல்ஸ்களை) கொண்டிருக்கும். எளிதாக மாற்றலாம் மற்றும் பயனர்கள் பதிவிறக்குவதற்கு முன்பே தீய கோப்புகளை கொண்டிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…