கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த நவம்பர் 23 ஆம் தேதி கஜா நிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 10 ஆம் தேதி வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…