அம்பானியை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்த கௌதம் அதானி..!

Gautam Adani Mukesh Ambani

உலக பணக்காரர்கள் மத்தியில் எப்பொழுதும் யார் அதிகச் சொத்து மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதில் மிகப்பெரிய போட்டியாக இருக்கும். அந்த போட்டியில் தற்பொழுது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசிய மற்றும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் தொழிலதிபர் கௌதம் அதானி.

மேலும் உலக பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் அதானி முதல் 12 இடங்களுக்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் அம்பானி 13வது இடத்தை பிடித்துள்ளார். உலகளவில் இந்திய தொழிலதிபரான எச்.சி.எல். நிறுவனத்தின் ஷிவ் நாடார் 45ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவில் பல மாதங்களாக முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளியது திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த மாபெரும் மாற்றம் கடந்த ஒரே மாதத்தில் நடந்துள்ளது என்பது தான் ஆச்சரியமான விஷயம். கடந்த டிசம்பரில் முகேஷ் அம்பானி 15 மற்றும் கவுதம் அதானி 14வது இடங்களில் இருந்தனர்.

பூமியிலிருந்து 350 கிமீ உயரம்… விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ சாதனை!

அதானியின் சொத்து மதிப்பு ஒரு நாளில் 7.7 பில்லியன் டாலர் உயர்ந்து 97.6 பில்லியன் டாலராக உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான அம்பானி, 97 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சிறிய வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்