பேராசையால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் விற்கப்பட்டது – பா.சிதம்பரம்!
மத்திய அரசின் பேராசையால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் விற்கப்பட்டது என பா.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பிற்கு மத்திய அரசிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமாகிய பா.சிதம்பரம் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தான் பாஜக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைந்துள்ளதாகவும், அதிக வரி விதிப்பதன் மூலம் தான் எரிபொருளின் விலையும் அதிகமாக உள்ளது என்பதும், மத்திய அரசின் பேராசையால் தான் இத்தனை நாட்கள் அதிக விலைக்கு எரிபொருள் விற்கப்பட்டது என்பதும் தற்போது உறுதிப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
It is a confirmation of our charge that fuel prices are high mainly because of high taxes
And our charge that high fuel taxes is because of the greed of the central government
— P. Chidambaram (@PChidambaram_IN) November 4, 2021