கேஸ் விலை நிர்ணய வழிகாட்டுதல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!
திருத்தப்பட்ட கேஸ் விலை நிர்ணய வழிகாட்டுதல்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை நிர்ணய வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி உள்நாட்டு நுகர்வோருக்கு கேஸ் விலை நிலையானதாக இருக்கும்.
மேலும் உற்பத்தியாளர்களுக்கும் சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஊக்கத்தொகைகளுடன் போதுமான பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த புதிய வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.