ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை இந்த தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷவாயு கசிவு அங்கிருந்து 3 கி.மீ தூரத்திற்கு பரவிய நிலையில், இந்த கசிவினால் அப்பகுதிவாசிகள் இடையே, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சாலையில் சென்ற சிலர் மயங்கி விழுந்துள்ளனர். இந்த கசிவினால் இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், மின்சாதனங்களை இயக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…