எல்பிஜி நுகர்வோருக்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை வெறும் ரூ 9க்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பினை பேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.
இன்று அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்நிலையில், எல்பிஜி நுகர்வோருக்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை வெறும் ரூ 9க்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பினை பேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. அதாவது, 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி எரிவாயு சிலிண்டர் மானியம் இல்லாமல் ரூ.809 க்கு வழங்கப்பட்டு வருகிறது.
பேடிஎம் சலுகையின் மூலம் ஒருவர் ரூ.800 வரை கேஷ்பேக் பெற முடியும். இதனால் நுகர்வோர் சிலிண்டரை வெறும் ரூ.9 க்கு பெற்றுக் கொள்ளலாம். அதாவது பேடிஎம் மூலம் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யப்படும் போது மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். ஏப்ரல் 30 வரை இந்த சலுகை செல்லுபடி ஆகும்.
இந்த சலுகை ஆனது முதன்முறையாக பேடிஎம் பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறை பேடிஎம் பயன்படுத்துபவர்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது ரூ.800 ஸ்கிராட்ச் கார்டை பெறுவார்கள். அதாவது இந்த தொகையானது ரூ.10 முதல் ரூ.800 வரை மாறுபடும். இந்தக் ஸ்கிராட்ச் கார்டு 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 7 நாட்களக்குள்ளாக இந்த கார்டை திறந்திருக்க வேண்டும்.
தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டரை பேடிஎம் மூலம் சலுகை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…