கர்வா சௌத் விரதத்தின் போதும் சர்கியில் சேர்க்க வேண்டிய 5 உணவுகள்.
கர்வா சௌத் என்பது கணவனின் ஆயுள் நிலைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் இருக்கும் விரதம் ஆகும். வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த விரதம் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த விரதம் இருக்கும் பெண்கள் காலையில் சூரியன் உதயமாக முன்னிருந்து மாலையில் சந்திரன் உதயமாகும் வரை உண்ணாமல் நோன்பு இருப்பர். இந்த விரதம் ஐப்பசி மாத பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் பெரும்பாலும் வட இந்தியாவில் தான் மேற்கொள்ளப்படுகிறது.
பெண்கள் அதிகாலை நேரத்தில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பதாக சர்கி என்ற உணவை சாப்பிடுவது உண்டு. இதனை பாரம்பரியமாக பெண்ணின் மாமியார் சர்கி தட்டை தயார் செய்வார். இதில் பல வகையான உணவுகள் அடங்கி இருக்கும். இந்த சர்கியில் கீழ்காணும் ஐந்து உணவுகளை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான விரதத்தை மேற்கொள்ள முடியும். அவை என்னென்ன உணவுகள் என்று பார்ப்போம்.
தேங்காய் நீர்
தேங்காய் நீர் கர்வா சௌத் விரதம் இருப்பவர்களுக்கு மிக சிறந்த ஒரு பானமாகும். இது வெறும் வயிற்றில் குடிப்பதால் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் நாள் முழுவதும் பலவீனமாக இருப்பதை உணராமல் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. இது உங்களது எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஊற வைத்த கொட்டைகள்
ஊற வைத்த கொட்டைகள் மற்றும் உலர் பழங்களை சர்கியில் சேர்த்து கொள்வது நல்லது. இது நாள் முழுவதும் அதிக ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் திராட்சை போன்ற ஊறவைத்த சில கொட்டைகளை உட்கொள்ளலாம். இதன் மூலம் இவை ஊட்டச்சத்தின் மதிப்பை அதிகரிக்க உதவுகிறது.
ரொட்டி
சர்கியில் சேர்க்கப்படும் உணவில் நார்ச்சத்து இருக்க வேண்டும். இது நாள் முழுவதும் வீக்கம் மற்றும் அமில தன்மையை கட்டுப்படுத்தும். அதாவது ரொட்டியில் தயிர் அல்லது காய்கறிகளுடன் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடலாம்.
பழங்கள் மற்றும் பழச்சாறு
சர்கியில் அதிகமாக பழங்களை சேர்க்க வேண்டும். அதற்கு மாறாக பழச்சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் ஆகியவை கிடைக்கிறது. இது பசி உணராமல் இருக்க உதவுகிறது. வாழைப்பழம், பப்பாளி, தர்பூசணி, மாதுளை, கொய்யா போன்ற விருப்பப்பட்ட பழங்களை சேர்த்து உட்கொள்ளலாம்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள்
சந்தையில் செய்யப்பட்ட இனிப்புகளை சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் செய்யப்படும் இனிப்புகளை பயன்படுத்தலாம். இனிப்புகளில் அதிக அளவு குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அவை உங்களது உடலுக்கு நீண்ட நேரத்திற்கு ஆற்றலை வழங்குகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…