கஜா புயல் நிவாரணம் அதிகளவில் வேண்டும்…. நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்…!!
கஜா புயல் நிவாரண நிதி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியுள்ளார்.
தமிழகத்தின் டெல்ட்டா மாவட்டத்தை கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது.இதனால் டெல்ட்டா பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்து.இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் , தமிழகத்தில் உள்ளாட்சி நிதி மற்றும் கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியை தமிழகத்திற்கு விரைவாக கொடுக்க வேண்டுமென்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.மேலும் மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் தோமரை வருகின்ற வியாழக்கிழமை சந்தித்து நிதி கேட்க இருப்பதாகவும் தமிழக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மேலும் அமைச்சர் கூறும் போது , இந்த சந்திப்பில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசவில்லை.கஜா புயல் பாதிப்புக்கு தமிழகத்துக்கு அதிக நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டுமென்று பேசப்பட்டது.கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு அதிகளவு நிதியை அறிவித்துள்ளது என்று தமிழக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்