ஹைதராபாத்தில் 10 கிலோ கஞ்சாவுடன் 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் போலீசாருக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவலின் படி நடைபெற்ற சோதனையில் இரண்டு நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து சுமார் பத்து கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு மொபைல் போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சேர்ந்த சந்தன் நவீன் என்றும் மற்றொருவர் நம்பல்லியை சேர்ந்த சுல்தான் மாலிக் என்று போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் கூறுவது :
நவீன் மற்றும் மாலிக் இருவரும் ஒடிசா மாநிலம் மல்கங்கிரிக்கு சென்று கஞ்சா சப்ளை செய்த பாபுலால் என்ற நபரை சந்தித்துள்ளனர். அவரிடம் இருந்து 10 கிலோ அளவிலான கஞ்சாவை வாங்கிக்கொண்டு ஹைதராபாத்திற்கு திரும்பியுள்ளனர். நகரில் உள்ள சில நபர்களிடம் கஞ்சாவை விற்பதாக தங்களுக்கு தகவல் வந்ததின் பேரில் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
விசாரணையில் உள்ளூர் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை வாங்கியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவர் மீதும் சத்ரிநாகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…