தலைநகரில் கூட்டு பலாத்காரம்; ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு ..!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 20 வயது பெண்ணுக்கு டெல்லி முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அந்தப் பெண்ணின் தலைமுடி வெட்டி செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக தெருவில் அழைத்து செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கபட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறை இதுவரை 8 பெண்கள் மற்றும் ஒரு ஆண் மற்றும் மூன்று சிறார்களை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்றதாக கூறினார்.
இந்நிலையில், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 20 வயது பெண்ணுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.