போலி கால் செண்டர் மூலம் இதுவரை 2.5 கோடிக்கு மேல் மோசடி செய்த 7 பேர் கொண்ட கும்பல் கைது!

Published by
Rebekal

போலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த ஏழு பேர் கொண்ட கும்பல் டெல்லியில் கைது.

டெல்லியில் தனிப்பட்ட நபர்களிடம் ஆன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி பவன் என்பவர் பலரை ஏமாற்றி வந்துள்ளார். இவருடன் சேர்ந்து போலி சிம்கார்டுகள், இணையதள மின்னஞ்சல் மாற்றங்கள் என மேலும் சிலர் கூட்டாளிகளாக இந்த தொழிலை செய்து வந்துள்ளனர். அதாவது ஒருவரை போலி நம்பரிலிருந்து அழைத்து, அவர்களை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி குறைந்த லாபமான வட்டி விகிதத்தில் கடன் தருவதாக உறுதி அளித்து ,அவர்களை ஏதாவது ஒரு வங்கிக்கணக்கில் 2 லட்சம் கட்டாயப்படுத்தி டெபாசிட் செய்ய வைத்து விடுகின்றனர்.

அதன் பின்பு அவர்களது நம்பரை அழித்து பிளாக் செய்து விடுகின்றனர், அல்லது இவர்கள் உபயோகிக்கும் சிம்கார்டை மாற்றிவிட்டு வேறு ஒரு சிம் கார்டை உருவாக்கி மீண்டும் இந்த தொழிலை செய்கின்றனர். இவ்வாறு டெல்லியில் காவலர்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் விசாரித்தபோது பவன்குமார் தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது குற்றம்சாட்டப்பட்ட பவன்குமார் அடையாளம் காணமுயற்சி பதற்காக மொபைல் எண்கள் மற்றும் பிற டிஜிட்டல் தகவல்களை பொருத்து பகுப்பாய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவர்தான் முக்கியமான குற்றவாளியான இர்பானுக்கு சிம் கார்டுகளை போலியாக வழங்கி வந்துள்ளார்.

இதுகுறித்து இர்பானிடம் விசாரித்தபோது, இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு செய்து வந்ததாக இர்பான் கூறியுள்ளார். இர்பான் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ஒரு மாதத்திற்கு 20 முதல் 25 நபர்களிடமிருந்து இவ்வாறு மோசடி செய்வார்களாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.5 கோடிக்கும் மேல் 500க்கும் மேற்பட்டவர்களை  ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மோசடி செய்யும் கூட்டாளிகளில் 3 பேர் கல்லூரி மாணவர்கள். பவனிடமிருந்து  பல போலி சிம்கார்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலிஸார் கூறியுள்ளனர். தற்போது 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

8 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

8 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

10 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

12 hours ago