#சிலை வைக்க -ஆன்லைனில் விண்ணப்பிக்க உத்தரவு!

Default Image

விநாயகர்சிலை வைப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க  அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஆகஸ்டில் அதாவது ஆவணியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதே போல் மகராஷ்ரா தலைநகர் மும்பையிலும் வெகு விமரிசையாக  விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.இவ்விழாவை இந்தாண்டு கட்டுப்பாடுகளோடு கொண்டாட பிஹரன் மும்பை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

விழா  குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு:

 

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் சிறிய, பெரிய என்று  சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணோத்ஸவ் மண்டலங்கள் இருக்கின்றன. இவற்றில்  இருந்து விநாயகர் சிலை வைப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.

இப்பணியானது நேற்று முன்தினம்  முதல் துவங்கப்பட்டு விட்டது. எனவே வரும் ஆக., மாதம் 19 ம் தேதி வரையில் விண்ணபங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

மேலும் விண்ணப்பத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  குறித்த உறுதிமொழி பத்திரத்தையும் உடன்  சமர்ப்பிக்க வேண்டும்.

 

என்றும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக அமைக்கப்படும் சிலைகள் ஆனது இந்தாண்டு  மட்டும் 4 அடிக்கு மேல் இருக்க கூடாது.சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பந்தல்கள் ஆனது ஒரு நாளைக்கு 3 முறை சுத்தப்படுத்தி ஆக வேண்டும். சிலையை வணங்க வருபவர்களுக்கு சானிடைசர்கள் போன்றவற்றை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் சிலைகள் வைக்கப்படும் இடத்தின் அருகே தற்காலிகமாக பூக்கள் விற்பனை கடையானது அமைக்கப்படும். ஆனால் இந்தாண்டு தற்காலிக பூக்கள் கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று பல நிபந்தனைகளுடன் மாநகராட்சி இவ்வறிவிப்பை அறிவித்துள்ளது.

மாநகராட்சி விதித்த கட்டுபாட்டு மற்றும்  நிபந்தனைகளை மீறுவோர் மீது தொற்று நோய்கள் சட்டம் (1897), தேசிய பேரிடர் தடுப்புச்சட்டம் (2005 ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (1860) ஆகியவைகளின் கீழ் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை தெரிவித்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்