விநாயகர் சதூர்த்தி : அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்க வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை வைத்து வழிபடுதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் சில மாவட்டங்களில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாய் வருகின்றனர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இந்த சுபநிகழ்ச்சி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
आपणा सर्वांना गणेश चतुर्थीच्या खूप खूप शुभेच्छा. हा शुभ प्रसंग प्रत्येकाच्या जीवनात सुख, शांती, सौभाग्य आणि आरोग्य घेऊन येवो. गणपती बाप्पा मोरया!
— Narendra Modi (@narendramodi) September 10, 2021