காந்தியின் 76ஆம் ஆண்டு நினைவு நாள்.! பிரதமர் மோடி, குடியரசு தலைவர் மரியாதை.!
இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினம் இன்று (ஜனவரி 30) அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை நாடு முழுவதும் “தியாகிகள் தினம்”ஆக அனுசரிக்கப்டுகிறது, அவரது நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கும், சிலைகளுக்கும் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்கொள்வோம் – காங்கிரஸ்
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் அரசுமுறை சார்பில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்திலும் , நமது தேசத்திற்காக உயிர்நீத்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது தியாகங்கள் நம்மை ஊக்குவிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், சத்தியம் மற்றும் அகிம்சையின் வழியைப் பின்பற்றி நாட்டு மக்களின் இதயங்களில் சுதேசி உணர்வை எழுப்பிய மகாத்மா காந்திஜிக்கு அவரது நினைவு நாளில் மரியாதை செலுத்துகிறேன். காந்திஜியின் அமைதி மற்றும் நல்லிணக்க செய்திகள் இன்றும் நாட்டிற்கு தேவையான கருத்துக்கள்.
தமிழகத்தில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள் மத நல்லிணக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சென்னையில் காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.