மன்னிப்பு கேட்க மறுத்தால் வழக்கு தொடரப்படும்! – கெஜ்ரிவாலுக்கு காம்பீர் எச்சரிக்கை!

Default Image

இந்தியாவில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று இம்மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தற்போது  இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. மே 12இல் கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் காம்பீர் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ஆம் ஆத்மியில் இருந்து ஆதிஷி என்பவர் போட்டியிடுகிறார்.  இவர் தேர்தல் பரப்புரையின் போது, தன்னைப்பற்றி அவதூராக கீழ்தரமாக துண்டு பிரச்சாரத்தில் எழுதி பாஜகாவினர் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காம்பீர், ‘ஆம் ஆத்மி கட்சி ஜெயிப்பதற்கு எடுத்துக்கொண்ட கீழ்தரமான வழி என சாடினார். மேலும் இந்த குற்றசாட்டை நிரூபித்தால் நான் போட்டியில் இருந்து விலகிவிடுகிறேன். அதேபோல நிரூபிக்க படவில்லை என்றால், கெஜ்ரிவால் போட்டியில் இருந்து விலக தயார என சவால் விடுத்தார். மேலும் என் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால்  கெஜ்ரிவால் மற்றும் அதிஷி மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்