Test Flight Gaganyaan Mission [file image]
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் இன்று விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனை காலை 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் மோசமான வானிலை காரணமாக 8.30-க்கு நடைபெறும் என தெரிவித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக இந்த சோதனையானது மேலும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மோசமான வானிலை, கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்டது ககன்யான் சோதனை விண்கலம்…!
16.6 கிமீ தூரம் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து வெற்றிகரமாக சோதனை நடைபெற்றது. பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிமீ தூரத்தில் வங்கக்கடலில் இறக்கி சோதனை நடத்தப்பட்டது. ஒரு வினாடிக்கு 8 மீட்டர் என்ற விகிதத்தில் பாராசூட் தரையிறக்கப்பட்டு கலன் வெற்றிகரமாக இயங்கியது. இதனைத்தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனையோட்டம் வெற்றி பெற்றது.
டிவி-டி1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, மீண்டும் தரையிறக்கப்பட்டது. அதாவது, திட்டமிட்டபடி சரியான பாதையில் ககன்யான் மாதிரி விண்கலம் கடலில் தரையிறங்கியது. வானிலை காரணமாக காலை 8 மணிக்கு விண்கலத்தை ஏவும் சோதனையில் தாமதம் ஏற்பட்டது.
Gaganyaan Mission: ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி!
க்ரூ எஸ்கேப் சிஸ்டம், க்ரூ மாட்யூலை வாகனத்திலிருந்து எடுத்துச் சென்றது மற்றும் கடலில் டச்-டவுன் உட்பட அடுத்தடுத்த செயல்பாடுகள் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் மாதிரி கலன் தரையில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவுக்கு ஏவப்பட்டு சோதனை நடைபெற்றது. பணி கலன் பிரதான ராக்கெட் தப்புவிப்பு ராக்கெட் ஆகியவற்றின் சோதனை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் அளவீடு மூலம் செய்யப்பட்டுள்ள தரவுகளை வைத்து அடுத்தடுத்து சோதனை நடைபெறும்.
கடலில் இறக்கப்பட்ட மாதிரி கலன் கப்பற்படையினரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்படும் என்றும் கடலில் கீழே இறங்கிய கலனை எடுத்து வந்த பின்னர் பல்வேறு ஆய்வுகளை இஸ்ரோ குழு மேற்கொள்ள உள்ளது எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். டிவி டி1 டெஸ்ட் ஃப்ளைட் மிஷன் இயக்குனர் எஸ் சிவக்குமார் கூறுகையில், இது முன் எப்போதும் இல்லாத முயற்சி. இந்த சோதனை அல்லது இந்த பணியின் மூலம் நாங்கள் சோதிக்க விரும்பிய மூன்று அமைப்புகளின் பண்புகளை பார்த்தோம்.
மேலும், சோதனை வாகனம், க்ரூ எஸ்கேப் சிஸ்டம், க்ரூ மாட்யூல் எல்லாம், முதல் முயற்சியிலேயே கச்சிதமாக நிரூபித்துள்ளோம். அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டன. கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக நாங்கள் தவம் இருந்தோம், இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…