இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு இன்றும், நாளையும் நடக்க உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு மதியம் 1மணிக்கு மேல் இடைவெளி விடப்படுகிறது. அதன் பின், அமர்வு தொடங்கும், இந்திய அரசு சார்பில், இன்று G20 தலைவர்களுக்கு விருந்து வழங்கப்பட உள்ளது.
இந்த மாநாடு முடிந்த பின்பு இரவு 7 மணிக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். இந்த மாநாடு காலை 10 மணிக்கு மேல் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்பொழுது மாநாடு தொடங்கியுள்ளது. இந்நாளில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, கல்வி நிறுவனங்கள், தனியார், அரசு அலுவலகங்கள் ஆகியவை 10ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…