#G20India: ஜி20 தலைவர் பதவியை இன்று ஏற்கிறது இந்தியா! பிரதமர் எழுதிய கட்டுரை!

Default Image

நமது கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும் என இந்தியா ஜி20 தலைமை பொறுப்பு ஏற்கும் நிலையில், பிரதமர் கட்டுரை.

இந்தோனோஷியாவில் நடைபெற்ற இரண்டு நாள் உலகத் தலைவர்களின் ஜி20 உச்சிமாநாடு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், ஜி 20 தலைவர் பதவியை பிரதமர் மோடியிடம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஒப்படைத்திருந்தார். டிச.1ம் தேதி இன்று முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக தலைவர் பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா இன்று ஏற்கும் நிலையில், பிரதமர் மோடி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஜி-20 அமைப்பின் முந்தைய 17 தலைமை நாடுகள் எடுத்த முயற்சிகளால் ஏற்பட்ட விளைவுகளில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், சர்வதேச வரிவிதிப்பை முறைப்படுத்துதல், நாடுகள் மீதான கடன் சுமையை நீக்குதல் அடங்கும். இந்த சாதனைகள் மூலம் நாம் பயன்பெறுவோம், மேலும் வளர்ச்சியடைவோம். இருப்பினும், இந்த முக்கியமான பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், ஜி-20 மேலும் சிறப்பாக செயல்பட முடியுமா?.

ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் வகையில், அடிப்படை மனநிலை மாற்றத்தை நாம் ஊக்குவிக்க முடியுமா? என எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். நம்மால் முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் ஜி-20 தலைமை பொறுப்பு இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடும். நமது மனப்போக்குகள் நமது சூழ்நிலைகளால் வடிவமைக்கப்படுகின்றன.

எனவே, நமது கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல. நாம் கூட்டாக மேற்கொள்ளத் தவறிய மனிதச் சூழல்களில், அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டுள்ளது. கருத்துக்கள், சித்தாந்தங்கள் மற்றும் அடையாளங்களுக்கிடையில் மோதல் மற்றும் போட்டி – வழக்கமாகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, இன்றும் நாம் அதே பூஜ்ஜியத் தொகை மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

மோதலும், பேராசையும் மனித இயல்பு என்று சிலர் வாதிடலாம். நான் உடன்படவில்லை. இன்று உலகில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான உற்பத்தியை மேற்கொள்ள நம்மிடம் வழிமுறைகள் உள்ளன. இன்று நாம் வாழ்வதற்கு போராட வேண்டிய அவசியம் நமக்கில்லை. நமது யுகத்தில் போருக்கு அவசியமில்லை.

இந்தியாவில் பிரபலமானது, அனைத்து உயிரினங்களையும், உயிரற்ற பொருட்களையும் கூட, அதே ஐந்து அடிப்படை கூறுகளால் ஆனது – பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் விண்வெளியின் பஞ்ச தத்வா. இந்த கூறுகளுக்கு இடையே உள்ள இணக்கம் – நமக்குள் மற்றும் நமக்கு இடையே – நமது உடல், சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கு அவசியம். பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், பெருந்தொற்றுகள் என்னும் மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொள்கிறோம்.

ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு இந்தப் பிரச்சினைகளுக்குதீர்வு காணமுடியாது. அதே சமயம், ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே தீர்வு காணமுடியும். இன்று நாம் வாழும் மிகப்பெரும் மெய்நிகர் உலகத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பங்கு முக்கியமாகும். இன்று இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. மக்களை மையமாக கொண்ட நமது ஆட்சி முறை, திறன்மிக்க இளைஞர்களின் படைப்பாற்றல் தன்மையை ஊக்குவிக்கும்.

சமூக பாதுகாப்பு, நிதி உள்ளடக்கம், மின்னணு பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் புரட்சிகரமான முன்னேற்றத்தை வழங்கியுள்ளது. இந்த காரணங்களால் இந்தியாவின் அனுபவம் உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியவை. நமது ஜி-20 தலைமை பொறுப்பின்போது நாம் இந்தியாவின் அனுபவங்கள், கற்றல்கள் மற்றும் மாதிரி செயல்பாடுகளை அனைவருக்கும் வழங்க முடியும்.

குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அவற்றை வழங்க இயலும். இந்தியாவின் ஜி-20-ன் மையப் பொருள் என்பது அனைவரது செயல்பாடுகள் சார்ந்ததாக, உறுதியானதாக இருக்கும். புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையாக இந்தியாவின் ஜி-20 தலைமையை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைவோம். மனிதநேயத்தை மையமாக கொண்ட உலகம் என்ற புதிய முன்னுதாரணத்தை வடிவமைக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்றுள்ளார்.

இதனிடையே, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவற்றை உள்ளடக்கியது ஜி20 அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்