ஜி20 மாநாடு: குரங்குகளை விரட்ட குரங்கின் கட்-அவுட் வைத்த மாநகராட்சி!
புது டெல்லியில் வருகின்ற செப்டம்பர் 9 முதல் 10 வரை நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லி அரசு மத்திய அரசுடன் இணைந்து, நடைபெறவிருக்கும் உலக அளவிலான கூட்டத்தை முன்னிட்டு, தேசிய தலைநகரை அழகுபடுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, G20 உச்சி மாநாட்டிற்கு சர்வதேச பிரமுகர்கள் வருகை தரும் இடங்களுக்கு அடிக்கடி வரும் குரங்குகளின் பயமுறுத்துவதே தடுக்க லங்கூர் குரங்கின் உருவ கட்அவுட்களை வைக்கப்பட்டுள்ளது. டெல்லியின் சர்தார் படேல் மார்க் மற்றும் கனாட் பிளேஸ் அருகே அமைந்துள்ள சென்ட்ரல் ரிட்ஜ் பகுதியிலும் லங்கூர்களின் கட்-அவுட்கள் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், கட்-அவுட்கள் தவிர, குரங்குகளை பயமுறுத்துவதற்காக லங்கூர்கள் சத்தத்தை கொடுக்க பயிற்சி பெற்ற 40 பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். லங்கூர்க கட்-அவுட்கள் சோதனை அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன, குரங்குகள் வனப்பகுதிக்குள் தங்குவதையும், உயரதிகாரிகள் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதிசெய்ய, டெல்லி வனத் துறையுடன் ஒருங்கிணைந்து இந்த தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புது தில்லி மாநகராட்சியின் துணைத் தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தார்.