உலகமே தற்போது உற்று நோக்கும் ஒரு மாநாடாக நாளை மற்றும் நாளை மறுநாள் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாடு மாறி வருகிறது. இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டு உள்ளன.
ஏற்கனவே, 3 நாட்களுக்கு பல்வேறு ரயில்கள் ரத்து, பல்வேறு ரயில்கள் புறப்படும் இடம், சேரும் இடத்தில் மாற்றம். விமான சேவையில் மாற்றம் என பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கல்வி நிறுவனங்கள், தனியார், அரசு அலுவலகங்கள் ஆகியவை 10ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாடகை ஆட்டோ ரிக்ஷா, கால் டாக்சி ஆகியவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் தாங்கும் விடுதிக்கு மேல் டிரோன்கள் பறந்தால் அதனை தாக்கி அழிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடடில் பங்கேற்க வரும் உலக நாட்டு தலைவர்களுக்கு டெல்லியில் இந்திரா காந்தி விமான நிலையத்தில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கிருந்து சிறப்பு பாதை வழியாக அவர்கள் தாங்கும் இடத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் அவர்கள் ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு அருகே தாங்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
ஜி20 மாநாட்டிற்கு வரும் தலைவர்கள் டெல்லியில் பாரத் மண்டபத்திற்கு அருகே உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட உள்ளனர். இதற்காக இந்த விடுதிகள் பலத்த பாதுகாப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் குருகிராம் பகுதிகளிலும் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் சில நாட்டு தலைவர்கள் தங்க வைக்கப்படஉள்ளனர்.
ஜி20 மாநாட்டிற்காக சுமார் 50 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்ற பாதுகாப்பு படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய 19 இடங்களில் தொலைநோக்கி மூலம் கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஏதேனும் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தால் கூட அதனை சமாளிக்க தலைவர்கள் தங்கும் இடத்தின் அருகே ஆயுதகிடங்குகள் ஒன்று தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமின்றி மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் பாரத் மண்டபத்திற்குள் அனுமதி பெற்று செல்லும் நபர்கள் கேமரா, குடை போன்ற இருபது வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…