ஜி-20 சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரை.
சென்னையில் மாமல்லபுரத்தில் ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை குறித்த அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மாமல்லபுரத்தின் அனுபவத்தை உங்களால் பெற முடியம். நெடுங்கடலும் தண்ணீரும்.. என்ற குரலை 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புனித துறவியான திருவள்ளுவர் கூறியுள்ளார்.
இந்தியாவில், இயற்கையும் அதன் அடிப்படையில் வழக்கமான கற்றலுக்கான ஆதாரமாக திகழ்கிறது. பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தெற்குலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது என்பது நமது அடிப்படை கடமை.
இயற்கை நமக்கு வழங்குவதைப் போல நாமும் இயற்கைக்கு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டு வர ஜி20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கையும் நாங்கள் நிர்ணயித்துள்ளோம். சர்வதேச சோலார் கூட்டணி, CDRI மற்றும் தொழில் மாற்றத்திற்கான ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம். பல்லுயிர் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…