ஜி20 மாநாடு.! ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டைக்கு பொதுமக்கள் செல்ல தடை.!
ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டை G20 பிரதிநிதிகளின் வருகை காரணமாக ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும்.
புதுடெல்லியில் இந்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் அடுத்த ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாட்டிலுள்ள 56 நகரங்களில் 215 செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் ஆறு கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதன் முதல் கூட்டம் ஜனவரி 28 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே G20 பிரதிநிதிகள் ஹைதராபாத்திற்கு வருகை தர உள்ளனர். பிரதிநிதிகளின் வருகைக்காகவும் அவர்களும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கோல்கொண்டா கோட்டை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.