ஜி.எஸ். டி கடந்த மாதம் ரூ .99 ஆயிரத்து 939 கோடி வசூல் ! மே மாதத்தை விட ரூ.350 கோடி குறைந்தது!
2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ். டி அமல்படுத்தப்பட்டது. அமலுக்கு வந்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்து உள்ளது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் வசூலான ஜி.எஸ். டி (சரக்கு மற்றும் சேவை வரியை) மத்திய வருவாய்த்துறை நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் ரூ .99 ஆயிரத்து 939 கோடி வசூலானது.ஆனால் கடந்த மே மாதம் மட்டும் ரூ. 1 லட்சத்து 289 கோடி ஜி.எஸ். டி வசூலானது.கடந்த மே மாதத்தில் வசூலான ஜி.எஸ். டி வரியை காட்டிலும் கடந்த ஜூன் மாதத்தில் வசூலான ஜி.எஸ். டி வரி சுமார் ரூ.350 கோடி குறைந்து உள்ளது.