காந்தியவாதியும்,முன்னாள் கர்நாடக எம்.பி.யுமான மேட்கவுடா காலமானார்..!

Default Image

காந்தியவாதியும் முன்னாள் கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.மடேகவுடா நேற்று காலமானார்.

காந்தியவாதியும் முன்னாள் கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினருமான(எம்.பி) ஜி.மேட் கவுடா,வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.அவருக்கு வயது 93, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் அவருக்கு உள்ளனர்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியுரப்பா, தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”மூத்த விவசாயி, முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜி. மேட் கவுடா அவர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது.அவரது மரணத்தோடு நாடு நிறைய மூத்த போராளிகளை இழந்துள்ளது. கடவுள் அவரது ஆத்மாவுக்கும், அவரது குடும்பத்திற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சமாதானம் அளிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து,கவுடாவின் மறைவுக்கு பல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒரு விவசாயியான கவுடா மைசூரு மகாராஜா கல்லூரியில் பட்டம் பெற்றார்.அதன்பின்னர்,மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட கவுடா சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 1942 மற்றும் 1947 க்கு இடையில் பல்வேறு காலகட்டங்களில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவ்வாறு,சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது அவரது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது. 1962 ஆம் ஆண்டு மற்றும் 1989 ஆம் ஆண்டுக்கு இடையில் கிருகாவலு சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் ஒன்பது மற்றும் 10 வது மக்களவைக்கு (எம்.பி.யாக) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்