கொரோனா’ வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து, ‘ஜி – 20’ அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று (மார்ச் 26) இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.இந்த ஆலோசனை ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடக்க இருக்கும் இந்த சந்திப்பில்,நமது பாரத பிரதமர், நரேந்திர மோடியும் பங்கேற்கிறார். உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தெற்காசிய நாடுகளின் பிராந்திய்ய கூட்டமைப்பு எனப்படும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், நமது பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, தற்போது, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என அனைத்து நாடுகளும் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசியுள்ளார். இந்த மோடியின் ஆலோசனையை அடுத்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான, ஜி – 20 அமைப்பின் கூட்டத்தை கூட்டுவதற்கு, தற்போது, சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது. அமைப்பின் தலைமை பொறுப்பில், சவுதி அரேபியா உள்ளது. இந்த, ஜி – 20 அமைப்பில்,
இந்த நாடுகள் தவிர, ஐரோப்பிய யூனியனும் இந்த கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.சவுதி அரேபியாவின் அழைப்பை ஏற்று, ஜி – 20 நாடுகளின் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று நடக்க உள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…