கொரோனோவை எதிர்கொள்ள இன்று கூடுகிறது ஜி-20 அமைப்பு… இன்று கொரோனோ தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை… வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாரத பிரதமரும் பங்கேற்பு…

Default Image

கொரோனா’ வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து, ‘ஜி – 20’ அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று (மார்ச் 26) இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.இந்த ஆலோசனை  ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடக்க இருக்கும் இந்த சந்திப்பில்,நமது பாரத  பிரதமர், நரேந்திர மோடியும் பங்கேற்கிறார். உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தெற்காசிய நாடுகளின் பிராந்திய்ய கூட்டமைப்பு எனப்படும்  சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், நமது பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, தற்போது, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என அனைத்து நாடுகளும் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசியுள்ளார். இந்த மோடியின் ஆலோசனையை அடுத்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான, ஜி – 20 அமைப்பின் கூட்டத்தை கூட்டுவதற்கு, தற்போது, சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது. அமைப்பின் தலைமை பொறுப்பில், சவுதி அரேபியா உள்ளது. இந்த, ஜி – 20 அமைப்பில்,

  • அர்ஜென்டினா,
  • ஆஸ்திரேலியா,
  • பிரேசில்,
  • கனடா,
  • சீனா,
  • ஜெர்மனி,
  • பிரான்ஸ்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • இத்தாலி,
  • ஜப்பான்,
  • மெக்சிகோ,
  • ரஷ்யா,
  • சவுதி அரேபியா,
  • தென் ஆப்ரிக்கா,
  • தென் கொரியா,
  • துருக்கி,
  • பிரிட்டன் மற்றும்
  • அமெரிக்கா இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகள்  தவிர, ஐரோப்பிய யூனியனும் இந்த கூட்டத்தில்  இடம்பெற்றுள்ளது.சவுதி அரேபியாவின் அழைப்பை ஏற்று, ஜி – 20 நாடுகளின் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று நடக்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்