இன்று மாலை பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!

இன்று மாலை பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு.
குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நேற்று, காலை வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடலுக்கு முக்கிய அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. 8 மணி அளவில் 13 பேரின் உடல்கள் டெல்லி பாலம் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், டெல்லி பாலம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025