பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொங்கியது.
குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 13 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 ராணுவ வீரர்கள் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு நேற்று இரவு 8 மணி அளவில் 13 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மலர் தூவியும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் திமுக எம்.பிக்கள் ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொங்கியது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. கன்டோன்மென்ட் மயானத்தில் இருவரின் உடல்களும் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…