ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. உடனடியாக,காஷ்மீர் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.பின் ஜம்மு பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு நீக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், காஷ்மீர் பகுதிகளில் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.கடந்த சில நாட்களாக ஜம்மு பகுதிகளில் மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேற்று முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று பள்ளிகள் நடைபெற்றது.
வருகின்ற 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில்,ஜம்மு காஷ்மீர் பகுதியில் பக்ரீத் பண்டிகையை அச்சமின்றியும், அமைதியான முறையிலும் கொண்டாட முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…