வந்தே – தேஜாஸ் ரயில் இயக்கத்தில் மாற்றம்.. இனி 3 நாட்கள் மட்டுமே இயங்கும்.! முழு விவரம்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் : தென்னிந்திய பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் வகையில், கொங்கன் ரயில்வே தனது அட்டவணையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, கொங்கன் ரயில் பாதையில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஜூன் 10ம் தேதி முதல் அக்டோபர் இறுதி வரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மும்பை சிஎஸ்எம்டி மட்கான் (22229/22230) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை சிஎஸ்எம்டி-மட்கான் (22119/22120) ஜூன் 10 முதல் தொடங்கிய பருவமழை கால அட்டவணை முடியும் வரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை Csmt (CSMT) இலிருந்து மட்கான் சந்திப்பு (MAO) வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் இயக்கப்படுகிறது. மும்பை இலிருந்து 05:25 க்கு புறப்படும் சிஎஸ்எம்டி ரயில் 15:30 க்கு மட்கான் சந்திப்பை சென்றடைகிறது.
அதன்படி, மும்பை இலிருந்து மட்கான் சந்திப்புக்கு சென்றடைய 1 நாள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 1 நாளில் 9 முக்கிய நிலையங்கள் வழியாக மும்பை இலிருந்து மட்கான் சந்திப்புக்கு சென்றடைகிறது குறிப்பிடத்தக்கது.