Ram temple
ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதையெடுத்து அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான 7 நாள் பூஜைகள் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில் கருவறையில் 51 அங்குலம் குழந்தை ராமர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது.
குடமுழுக்கு நடைபெறும் நேரம்:
குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யும் முக்கிய பூஜை இன்று பிற்பகல் 12:20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று முறைப்படி கோவிலை திறந்து வைக்க உள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா பிற்பகல் 12.05 மணிக்கு தொடங்குகிறது. கும்பாபிஷேகம் பிற்பகல் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடக்க உள்ளது.
இதில் 12.29 நிமிடம் 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் கோயில் திறக்கப்பட உள்ளது. அயோத்தியில் நிறுவப்பட்டு உள்ள ராமர் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே எல்இடி திரையில் ராமாயண கதைகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
8000 பேருக்கு அழைப்பிதழ்:
அயோத்தி முழுவதும் ஆங்காங்கே சமையல் கூடங்கள் அமைத்து கும்பாபிஷேகம் விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு 24 மணி நேரம் இலவச பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. இதில் 2000 பேர் சாதுக்கள், 5000 பேர் பல்வேறு துறை சார்ந்தவர்கள். இதில் நடிகர்களான அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், சிரஞ்சீவி, மோகன்லால், அல்லு அர்ஜுனன், ஜூனியர் என்டிஆர், கங்கனாராவத் உள்ளிட்டரும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி ஆகியோர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிலதிபர்கள் கௌதம் அதானி, அம்பானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, இஸ்ரேல் தலைவர் சோம்நாத் என 506 விவிஐபிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அழைப்பிதழ் தரப்பட்டிருந்தாலும், அவர் நிகழ்வில் பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அயோத்தி கோவில்:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 70 ஏக்கரில் 70 % நிலம் பசுமையானதாக உள்ளது. 7 ஏக்கர் மட்டுமே கோயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. இந்த கோவிலில் 392 தூண்கள் 44 கதவுகளும் உள்ளது. கதவுகள் அனைத்தும் தேக்கால் செய்யப்பட்டுள்ளது. இரும்பு,சுண்ணாம்பு, சிமெண்ட் போன்றவையும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10,000-க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…