ஏப்ரல் 23 முதல் 26 வரை புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்!!
புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 4 வாரங்களில் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.
அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுகிறது என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 23 முதல் 26 வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் புதுச்சேரியில் தினதோறும் பாதிப்பு மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட அதிகம் ஆகும்.